Saturday, January 07, 2006

(கி.நா): வள்ளல் வாழ்த்து பாடல் - ௩

கிறுக்கல் நானூறு - வள்ளல் வாழ்த்து.
பாடல் - ௩

மரபுக் கவிதை என்றால் அதில் வள்ளல் வாழ்த்து இல்லாமல் முழுமையடையுமா?

சகமனிதர் இன்னல் கருதா கொடுங்கலி
யுகமதில் விளங்கவே கேகே நகர்வாழ்
கலையருள் லக்ஷ்மணன் வள்ளல் அவர்தம்
தலைமுறை ஏழும் வளர்க!


வழங்கு பெயர்களை தமிழ் மரபுக்கவிதையில் சேர்த்தமைக்கு அன்பர்கள் மன்னிக்கவும்.

சென்னையில் உள்ள, கலைஞர் கருனாநிதி நகர் என்றால் அனைவருக்கும் புரியுமா என்ற அச்சத்தாலும், ஊர் பெயரே நிறைய இடத்த ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற எண்ணத்தினாலும் இந்த செய்கை....

வள்ளல் வாழ்த்தைப் பார்த்தவுடன் இது ஏதோ தனிமனிதர் வழிபாடு என்று எண்ணிவிட வேண்டாம்.

சிறு வயதிலேயே எனது தாயை இழந்து, 2000 ஆண்டில் நான் புதுவைப் பல்கலைக்கழகத்திலே M.C.A (1998-2001) படித்துக்கொண்டிருந்தபோது எனது தந்தையும் இறந்துவிட, படிப்பை தொடர்ந்து முடிக்கமுடியுமா என்ற சூழ்நிலை...

அப்போது, தானே முன்வந்து, மாதம் 1000 உரூபாய் கொடுத்து, படிப்பை முடிக்க உதவியாய் இருந்தது மட்டுமல்லாமல், எனக்கு வேலை கிடைக்கும் வரையிலும் கொடுத்துதவிய எனது நண்பனை நான் இங்கு குறிப்பிடாவிட்டால் வேறெங்கும் குறிப்பிட முடியாது என நினைக்கிறேன்.

எனது நண்பனைப் பார்த்து நிறைய நாளாயிற்று.இதை அவன் படிக்க
சந்தர்ப்பம் நேர்ந்தால் மகிழ்வேன்.புகழுரைகளை நேரில் சொல்லமுடியாதல்லவா...

(இன்று வரை, நான் அந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை, அவனும் கேட்டதில்லை, கொடுத்துவிட்டால் நன்றியிழை அறுந்துவிடுமோ?)

வாழ்த்த நினைத்தால், அன்னாரின் மின்னஞ்சலுக்கு lakshman.prasad@gmail.com அனுப்பலாம்.

(அவர் செய்த உதவிக்கு நான் , SPAM செய்ய வைப்பதுதானா நன்றிக்கடன்?. லக்ஷ்மணன் என்னை மன்னிக்க.., )


அன்பன்,
நல்லவன்

0 கருத்துக்கள்:

Post a Comment

<< Home