(கி.நா): வணக்கம்,வணக்கம்! பாடல் -௫
கிறுக்கல் நானூறு - அவையடக்கம் - பாடல் -௫
வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பல வகையான தகவல்களை, தனக்கே உரிய தனிச் சுவையுடன் கொடுத்துக்கொண்டிருக்கும் வலைப்பூவர்கள் அனைவருக்கும் நன்றி.
தான் எழுதும் கிறுக்கல்களுக்கு ஏதேனும்
ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கிக்
கொண்டிருந்த எனக்கு இந்த வலைப்பூ
உலகம் சொர்க்கமாய் தோன்றுகிறது.
அதனினும் மேலே அத்தனை பதிவையும்
அது தேனோ, குளவிக்கொட்டோ எதுவாயிருந்தாலும்
அதை திரட்டி அனைவரும் படிக்கும் வகையில்
செய்து தமிழுக்கு ஒரு வகையில் தொண்டாற்றி வரும் திரட்டிகளுக்கும் நன்றி.
தமிழ்மணம், தேன்கூட்டின் அன்பரும் கூட்டும்
அமிழ்தினுந் தேர்ந்த, வலைப்பூப் பதிவரின்
பூக்களதைக் கோர்த்து, கதம்பமாய் நல்கிடும்
நோக்கத்தைப் போற்றுதும் யாமே...
என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.கவிதை மற்றும் ஆன்மிகம் போன்ற பதிவுகள் நிறைய வருகின்றன. முக்கியமாய் இது சார்ந்த விண்மீன் பதிவர்கள் நன்றாய் ஒளிர்கிறார்கள். வாசகர் பரிந்துரையைப் பார்த்தாலே இது விளங்குகிறது. (குமரன், ஞானவெட்டியான் அவர்களின் ஆன்மிகம் பரப்பும் தொண்டு பிரமிப்பூட்டுகிறது). தற்போதுதான் வலைப்பூ படிக்கத்தொடங்கியிருக்கிறேன்.
எனது கிறுக்கல்களையும் ஏற்று அல்லது பக்குவப்படுத்த ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(பி.கு.. பேச்சுத்தமிழில் எழுதத்தான் ஆசை, ஆனால் என்ன பன்றது, மரபுக்கவிதை மேல ஆசைப்பட்டாச்சு... அதனால் உரைநடைத்தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.)


2 கருத்துக்கள்:
வணக்கம்.
அட கவிதை மரபிலயே இருகட்டும்.
பேச்சுத் தமிழைப் புகுத்த என்ன தயக்கம்?
உங்கள் மற்றப் பதிவுகளையும் வாசித்தேன். சுவாரசியமாயிருக்கிறது.
குறிப்பாக "சாவா படித்தேன் சிறந்து".
தொடருங்கள்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு. வசந்தன் அவர்களே..
உங்கள் பதிவுகளை தற்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன்.
நன்றி.
நல்லவன்.
Post a Comment
<< Home